கொத்தனாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்!விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட ஊர்மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ஆவார்.இவர் அப்பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் 3 வயது கைகுழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலை மணிகண்டன் அவருடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது 3 இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.மேலும் உடன் இருந்த நபர்களை அந்த கும்பல் அரிவாளால் தாக்க முயன்றுள்ளது ஆனால் அவர்கள் தப்பியுள்ளார்.
இதன் காரணமாக தகவல் அறிந்து வந்த ஊர்மக்கள் மணிகண்டனின் உடலை கண்டு கதறி அழுதுள்ளனர்.பின்னர் இதன் காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அவர்களை ஊர்மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.மேலும் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க விட மாட்டோம் என்று பொதுமக்கள் சாலை மறியல் செய்து, கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக நீண்ட நேரம் சமரசத்துக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆனால் ஊர் மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை விடியவிடிய சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதன் காரணமாக அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025