காதலியுடன் வாழ காதலி கணவருக்கு 71 ஆடுகள் கொடுத்த காதலன்!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரை சார்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சீமா. கணவர் ராஜேஷ் உடன் சீமாவிற்கு வாழ பிடிக்காமல் அதே பகுதியே சார்ந்த உமேஷ் என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.
இதனால் ராஜேஷ் தந்தை கிராம பஞ்சாயத்தில் இழப்பீடு வேண்டும் என கோரிக்கை வைத்தார்.உடனடியாக கிராம பஞ்சாயத்தார் சீமா மற்றும் உமேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம பஞ்சாயத்தாரிடம் தான் உமேஷ் உடன் வாழ விரும்புவதாக கூறினார். இதனால் இழப்பீடாக உமேஷ் வளர்ந்து வரும் 142 ஆடுகளில் பாதியளவு அதாவது 71 ஆடுகளை ராஜேஷுவிற்கு கொடுக்க பஞ்சாயத்தார் முடிவு செய்தனர்.
பின்னர் உமேஷ் , சீமா மற்றும் ராஜேஷ் ஆகியோரிடம் ஒப்பந்தம் கையெழுத்தானது. பஞ்சாயத்தார் முன்னிலையில் ராஜேஷுவிற்கு சீமா காதலன் உமேஷ் 71 ஆடுகளை இழப்பீடாக கொடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025