இன்று வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை இன்று பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த நிலையில் தொடந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.முதலாவதாக சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின் சிதம்பரத்தை இன்று பகல் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.சிதம்பரத்துக்கு நேற்றோடு தடை முடிந்த நிலையில் இன்று மதியம் வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!
July 5, 2025
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025