சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை-உச்சநீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி உய்ரநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில்மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது .ஓன்று சிபிஐக்கு எதிராகவும்,அமலாக்கத்துறைக்கு எதிராகவும் தாக்கல் செய்யபப்பட்டது.ஆனால் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்த நிலையில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.நேற்று நடைபெற்ற விசாரணையில் இன்று பகல் 12 மணி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது .வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது .மேலும் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025