சீட் பெல்ட் அணியாததால் அபராதம்..! அதிர்ச்சியடைந்த இருசக்கர வாகன ஒட்டி ..!

புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பகுதியை சார்ந்த ராஜபிரபு.இவர் கடந்த வாரம் அவருடைய இருசக்கர வாகனத்தில் காரைக்குடி -அறந்தாங்கி சாலையில் சென்று கொண்டு இருந்த போது அங்கு வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை ராஜபிரபுவை வழி மறித்தனர்.
ராஜபிரபு தலைக்கவசம் அணியாமல் சென்று உள்ளார்.இதனால் காவல்துறை ராஜபிரபுவிற்கு அபராதமாக ரூ.100 வசூலித்து உள்ளனர்.அபராதம் வசூல் செய்த ரசீதையும் காவல்துறை வழங்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரசீது சீட்டை பார்த்து ராஜபிரபு அதிர்ச்சியடைந்தார்.அந்த ரசீது சீட்டில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் என எழுதப்பட்டு இருந்தது.பின்னர் இது குறித்து கே.புதுப்பட்டி காவல்துறையிடம் கேட்டபோது பணிச்சுமை காரணமாக மாற்றி எழுதியதாக கூறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025