முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?ஸ்டாலின் கேள்வி

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது .விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நாங்குநேரியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்[பொழுது அவர் பேசுகையில்,முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? என்று கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025