முதன் முறையாக கடனை கட்டமுடியாமல் ஜப்தி செய்யப்பட்ட தனியார் விமானம்..!

கேரளாவில் உள்ள கொச்சினை சார்ந்த விமான பைலட்டுகளான சூரஜ் ஜோஸ் மற்றும் சுதீஷ் ஜார்ஜ் இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து விமானம் வாங்க ரூ. 4 கோடி கடன் வாங்கி உள்ளனர்.
கடன் வாங்கிய பணத்தில் ஒரு தனியார் விமானத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியாக வந்து உள்ளது.
வங்கியில் வாங்கிய கடனை இருவரும் சரியாக செலுத்தவில்லை. இதனால் அந்த தனியார் வங்கி அவர்களின் விமானத்தை ஜப்தி செய்துள்ளது. வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் விமானம் ஜப்தி செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025