சந்தோசமா மழையை வரவேற்போம்! மழை நீரை சேமிப்போம் : சௌந்தரராஜா

நடிகர் சௌந்தரராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், குறும்பட இயக்குனரும் ஆவார். இவர் வேட்டை, சௌந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நானும் நந்தினியும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். உவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பெய்துவரும் மழையை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சந்தோசமா மலையை வரவேற்போம். மழை நீரை சேமிப்போம். மழை நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசு உருவாகிறது.
வீடுகள், தெருக்களில் நீர் தேங்காமல் சுத்தமாக வைப்போம். டெங்கு வராமல் உயிர் காப்போம். வருமுன் காப்பாத்த சிறந்தது. என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025