2050க்குள் கடலில் மூழ்கவுள்ள சென்னை மற்றும் மும்பை.. இதுதான் காரணம்..!

2050ஆம் ஆண்டிற்குள் சென்னை, மும்பை, போன்ற ஏழு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதன்மூலம், 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை நோக்கி இருப்பதாக கூறினார்கள்.
இது தொடர்பான ஆய்வுகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதில் பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் நாடுகள், 75% ஆசிய கண்டத்தை சேர்ந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் 2050க்குள் கடல்நீர்மட்ட உயர்வால், உலக அளவில் சுமார் 30 கோடி மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதில் இந்தியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 6 நாடுகள் இந்த ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவின் கடலோர மாவட்டங்களான சென்னை, மும்பை , கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதற்க்கான காரணம், கார்பன் உமிழ்வு என்று கூறினார். மேலும் இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால், நாம் கார்பன் உமிழ்வை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025