பிரபல நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரிதா நாயர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .இவர் மலையாளம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் பிஜு ராதாகிருஷ்ணன்.கோவையில் உள்ள நிறுவனம் ஒன்றின் மூலம் காற்றாலை உபகரணங்களை இருவரும் விற்பனை செய்து வந்தனர். இந்த நிறுவனம் மூலம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த சிலரிடம் லட்சம் கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சரிதா நாயர் மீது கோவை காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025