மீண்டும் ஒரு சுஜித்! 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்!

திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் சோக வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், நேற்று காலை சுமார் 9 மணியளவில், மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள கல்வான் கிராமத்தில் 6 வயதான ரித்தீஷ் ஜீவன்சிங் என்ற சிறுவன் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனுக்கு முதலில் உயிர்காக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
பின் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணக்கம் சோழ மண்டலம் : “நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க” – தமிழில் பேசிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025