விசித்திரமான கிராமம்..! பாலியல் வன்கொடுமை செய்தவருக்கும் , பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அபராதம்..!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 23 வயது மதிப்புத்தக்க இளம் பெண் தனது அண்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார் .
அங்கு அவருக்கு ஏற்கனேவே அறிமுகமான கிஷோர் , சந்தீப் இருவரரையும் சந்தித்து உள்ளார்.அப்போது அவர்கள் கட்டிட வேலை இருக்கிறது.வந்தால் சம்பளம் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பி அந்த இளம் பெண் அடுத்த மறுநாள் சென்று உள்ளார்.அப்போது கிஷோர் , சந்தீப் இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண் தனது தாயிடம் கூறிள்ளார்.அவர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார்.அவர்கள் ஒரு புகாராக எழுதி கொடுங்கள் என கூறியுள்ளனர்.புகார் எழுத தயங்கிய அவர் ஊரில் உள்ளவர்களிடம் விசாரித்துவிட்டு வருவதாக கூறி வீட்டுக்கு சென்று விட்டார்.
சில நாள்கள் கழித்து அந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஊர் முழுக்க தெரியவந்தது இதை அடுத்து ஊர் பஞ்சாயத்து பாலியல் வன்கொடுமை செய்த கிஷோர் , சந்தீப் இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் ஊர் பஞ்சாயத்தை மீறி காவல் நிலையத்திற்கு சென்றதால் அந்த இளம் பெண்ணுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து போலீசார் கூறுகையில் , எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை ,பாலியல் வன்கொடுமை செய்த கிஷோர் , சந்தீப் இருவரையும் கைது செய்து உள்ளோம்.மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025