இந்த குழந்தை என் மகனுக்கு பிறக்கவே இல்லை-மிரட்டும் மாமியார்-DNA சோதனைக்கு நான் தயார்- மருமகள்…தர்ணா..!

- தென்காசி அருகே என் மகனுக்கு பிறக்கவில்லை இந்த குழந்தை என்று மாமியார் அடம்
- டி.என்.ஏ சோதனை செய்ய நான் தயார் என்று கணவன் வீட்டின் முன்பு மருமகள் தர்ணா போராட்டம்.
தென்காசி கட்டேறிப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தென்மொழிக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடந்துள்ளது.திருமணம் ஆகிய 20 நாட்களில் முருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனிடையே கடந்த நவம்பரில் தனது தாய் வீட்டில் தென்மொழிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.ஆனால் கணவர் வீட்டாரோ இந்த குழந்தை எங்கள் மகனுக்கு பிறக்கவில்லை என்று கைக்குழந்தையுடன் கணவன் வீட்டிற்கு வந்த மருமகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து அவருடைய மாமியார் கடுமையாக நடந்து உள்ளார்.
கைக்குழந்தையுடன் கணவன் வீட்டிற்கு ஆசையோடு வந்த என்னை இப்படி அவமானம் படுத்துகிறார்கள் இந்தக் குழந்தை எனக்கும் என் கணவனுக்கு பிறந்தது தான் வேண்டுமானால் வெளிநாட்டிலுள்ள தனது கணவரை டி.என்.ஏ பரிசோதனை செய்ய அழைத்து வாருங்கள் அதுவரையிலும் வீட்டிற்குள் என்னை அனுமதியுங்கள் என்று கூறி கைக்குழந்தையுடன் கணவன் வீட்டின் முன்பு தென்மொழி தர்ணாவில் ஈடுபட்டார்.தென்காசி அருகே நடந்துள்ள இந்த சம்பவம் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள புனிதமான உறவை கொச்சைப் படுத்துவதாக குடும்ப நல ஆர்வர்கள் நோக்குகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025