மத்திய அரசு பெண் ஊழியரை வன்கொடுமை செய்தவருக்கு முன்ஜாமீன் மறுப்பு .!

- சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
- அவரை அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை செய்து உள்ளார்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் வயது (32) .இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் நான் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்.
அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் (24), என்னிடம் தம்பி போல பழகி வந்தான். அவன் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றான். அங்கு “கேக்” வெட்டிய பிறகு நான் வீட்டிற்கு புறப்பட்டபோது எனக்கு அவன் குளிர்பானம் கொடுத்தான். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.
பிறகு கண் விழித்து பார்த்தபோது நான் நிர்வாணமாக இருந்தேன். என்னை என்ன செய்தாய்.? எனகதறி அழுதபோது அவன் என்னுடைய பிறந்தநாள் பரிசே நீதான் என கூறினான். மேலும் ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளான். அந்த வீடியோவை காட்டி அவ்வப்போது என்னிடம் பணம் பறித்து வருகிறான்.
ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடீயோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறான். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, இதுவரை ரூ.15 லட்சம் பறித்துள்ளான். தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறுகிறான் என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வெள்ளைதேவனை கைது செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.
வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என அந்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இறுதியாக வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025