இரத்த நிறத்தில் காட்சியளிக்கும் வானம்!கலங்கி நிற்கும் மக்கள்!

- ஆஸ்திரேலியாவில் காட்டு தீ வெகுவில் பரவியதால் அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்டியளித்துள்ளது.
- இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் காட்டு தீ மிகவும் பரவலாக பரவியுள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் வானம் இரத்த நிறத்தில் காட்சியளித்தது.அப்பகுதி மக்கள் அனைவரும் கடற்கரை நோக்கி படையெடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்ற இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-க அதிகரித்துள்ளது.
மேலும் அதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியில் வீசும் காற்று திசை மாறியதன் காரணமாக காட்டு தீ மோசமாக பரவியதாக அப்பகுதி தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் காட்டு தீ தொடர்ந்து பரவி வருவதால் ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025