BREAKING :திருப்பூர் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு.!

- இன்று காலை 8 மணி முதல் 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
- திருப்பூர் மாவட்டத்தில் குலுக்கல் முறையில் சுயேட்சை வேட்பாளர்களாக அங்கப்பன் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் குலுக்கல் முறையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்ந்து தெடுக்கப்பட்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் உள்ள அய்யம்பாளையம் ஊராட்சியில் அடுத்த சின்ன ஓலைப்பாளையம் கிராமத்தில் சுயேட்சை வேட்பாளர்களாக அங்கப்பன் ,பொன்னுசாமி இருவரும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதைஅடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அங்கப்பன் , பொன்னுசாமி இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று இருந்தனர்.இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஹரிகரன் இருவருடைய ஒப்புதலுடன் குலுக்கல் முறையில் இருவரின் பெயரையும் ஒரு சீட்டில் எழுதி போட்டு இருவரின் முன்னிலை ஒருவர் சீட்டு எடுக்கப்பட்டது.அதில் அங்கப்பன் பெயர் இருந்ததால் அவர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025