சூர்யாவின் சூரரைப் போற்று- டீசர் அறிவிப்பு தேதியை வெளியிட்ட படக்குழு-மற்றற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள்

- இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று
- சூரரைப் போற்று படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களின் கேள்விக்கு படக்குழு பதில் அளித்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி வருகின்ற படம் சூரரைப் போற்று. இந்த படம் இந்தியா நாட்டின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றையை மையப்படுத்தி உருவாகி வருகின்றது.படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்து உள்ளது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷனுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஆனது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
டீசர் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் படக்குழுவிடம் அப்டேட் கேட்டு வந்த நிலையில் படக்குழு ஜன.,7 தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவித்து உள்ளது. புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஜன.,7 அன்று மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
Get ready folks teaser releasing on #SooraraiPottruTeaser7Jan1700hrs #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @editorsuriya @jacki_art @guneetm @sikhyaent @SakthiFilmFctry @gopiprasannaa @johnsoncinepro pic.twitter.com/MhZa4b4ErU
— G.V.Prakash Kumar (@gvprakash) January 5, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025