இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் : நடிகை ஷாலினி பாண்டே

இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.
நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், நடிகை விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மூலம், ஷாலினி பாண்டே பிரபலமாக பேசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கொரில்லா, நூறு சதவீத காதல் என இரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியில் உருவாகி வரும் ஒரு புதுப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவர்தான். ரன்வீர் சிங்குடன் நடிக்க தயங்கினேன். ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதராகவே நடந்துகொள்கிறார். என்னையும் அப்படியே நடத்துகிறார். பெண்களுக்கு நிறைய மரியாதை கொடுக்கும் அவர், இணைந்து நடிக்கும்போது நிறைய சொல்லிக் கொடுக்கிறார். இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025