சதம் அடித்த சாந்தமான தாத்தா.. குடும்பத்தினருடன் கொண்டாட்டம்… அறுசுவை விருந்தளித்து ஆசிர்வாதம்…

தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் நாகலிங்கம், இவருக்கு வயது 100. இவரது மனைவி, நாகரத்தினம். சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் மற்றும் ஏழு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று, முதியவர், நாகலிங்கத்திற்கு, 100வது பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி, அவரது பிறந்த நாள் விழாவை , கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர் அவரது குடும்பத்தினர். எனவே, பல்வேறு ஊர்களில் வசித்து வரும், அவரது, மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என, 150 பேர், ஒரே இடத்தில் குழுமினர். பின் அவர்கள் நூறு ஆண்டுகள் கண்ட தனது தந்தை, ‘கேக்’ வெட்டி, தனது பிறந்தநாள் கொண்டாடினார். மேலும், அவரது பிறந்த நாளுக்காக அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது. உறவினர்கள் அனைவரும், நாகலிங்கம் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். தனது நூற் வயதுக்கான ரகசியம் குறித்து மனம் திறந்த அவர், ”தினமும், வாழை இலையில் தான் சாப்பிடுவேன். அளவான உணவு மட்டும் தான் உட்கொள்கிறேன்; அதனால், ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025