வழியெங்கும் கலை நிகழ்ச்சி.! அதிபர் வருகையை முன்னிட்டு 2 லட்சம் பேர் வரவேற்பு.!

Default Image
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் அவர் வரும் வழியெங்கும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் வரும் 24-ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்கள். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் அவரை, பிரதமர் மோடி வரவேற்கிறார். இங்கிருந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். பிறகு மோட்டேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் என்ற கிரிக்கெட் ஸ்டேடியதுக்கு செல்கின்றனர். அங்கு பிரதமர் மோடி நமஸ்தே ட்ரம்ப் என்ற தலைப்பில் வரவேற்பு அளிக்கிறார். இந்நிலையில், ட்ரம்ப் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ட்ரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அகமதாபாத்தில் தன்னை 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்கவுள்ளதாக உற்சாகமாக கூறினார். அகமதாபாத் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் பேர் என்பதால் 70 லட்சம் பேர் எப்படி வரவேற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 22 கி.மீ. சாலை வழிப் பயணத்தில் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருவது உறுதியாகி உள்ளது. இந்திய கலாச்சாரத்தை காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ட்ரம்ப் வருகை தொடர்பாக குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி, காந்தி நகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு  நடவடிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் குறித்து தெரிவித்தார். பின்னர் வழியெங்கும் ட்ரம்ப் செல்கிற பாதையில் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர் அவரை வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்களா என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh