சிஏஏவை மத்திய அரசு கைவிட வேண்டும்.! திராவிடர் கழக தலைவர் கோரிக்கை.!

- குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவரமாக மாறியது. பின்னர் இந்த சட்டத்தை கண்டித்து பல காட்சிகள் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் சட்டம் என்று குற்றம் சாட்டினார். மேலும் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் முழுமையான சட்டமாக வர வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். இதையடுத்து தமிழக அரசின் நீட் மற்றும் நெக்ஸட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025