இன்னும் சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திக்கவுள்ளேன்-அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹிந்தியில் ட்வீட்

இன்னும் சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திக்கவுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020
சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹிந்தியில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்தியா வருவதற்கு ஆர்வமாக உள்ளேன் .இன்னும் சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திக்கவுள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025