ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு.!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்த நிலையில், அவரை நீக்கிவிட்டதாக காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்காக ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இதனிடையே மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த ஜோதிராதித்யா சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்துள்ளார். முதலமைச்சர் கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவில் சிந்தியா இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025