அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 09-ம் தேதி அறிவித்தது. அதன்படி கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகிய மூன்று பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர். மேலும் தமாக தலைவர் ஜி.கே.வாசனும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025