நடக்குமா?நடக்காத??இல்லை தெர்மல் ஸ்கேனரா!?? உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கு கேள்வி!?

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஐபிஎல் போட்டித் தொடரையே ரத்து செய்யக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மார்ச் 23க்குள் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஐபிஎல் போட்டிகளுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சீகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீதான விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. அப்போது ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைப்பதா?? அல்லது மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா?? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்தது. இது குறித்து மார்ச் 23க்குள் விரிவாக பதிலளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச்-23க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025