தமிழ் சினிமாவில் 3 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.!

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் கடந்த 3 வருடமாக அவர் நடிப்பில் எந்த படங்களும் வரவில்லை. இந்த நிலையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன், சசிகுமாரின் குட்டிப் புலி ஆகிய படங்களில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருந்தார். கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த லட்சுமி மேனன், தற்போது மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025