உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை.!

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் அதீத நடவடிக்கையாக பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீட்டில் இருக்காமல் வெளியே நடமாடினால் காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சிரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தனிப்படுத்தப்பட்ட பயணிகள் அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில், அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் விபரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025