கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக தயாநிதிமாறன் அறிவிப்பு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பின் கொரோனா தடுப்புப் பணிக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் & எம்.எல்.ஏக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தங்களது நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக திமுக எம்பி தயாநிதிமாறன் அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஊதியத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
I’ve donated my 1 month salary to the Tamil Nadu Chief Minister’s Public Relief Fund as per the instructions of our #DMK leader #Thalapathy Thiru.@mkstalin. Let’s work together in the fight against #Corona! #COVID19 #Coronaindia #TN_Together_AgainstCorona pic.twitter.com/Uew67ZJSev
— தயாநிதி மாறன் Dayanidhi Maran (@Dayanidhi_Maran) March 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025