மாநிலங்களுக்கு ரூ.3,000 கோடி நிதி வழங்கப்படும் -மத்திய சுகாதாரத்துறை

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிகமாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, சீனா, பிரான்ஸ், ஈரான், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்பும், பலியும் உயர்ந்துகொண்டே போகிறது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் 319 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே தேசிய சுகாதார நடவடிக்கை நிதியிலிருந்து ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025