தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்காக நிதியுதவி வழங்கிய காஜல்!

நடிகை காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை கால் அகர்வால், தெலுங்கு சினிமா தொழிலார்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.