இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் 27,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது.6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மகாராஷ்டிராவில் 8,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோனா பாதிப்பால் 1,076 பேர் குணமடைந்துள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025