வருவாய் இழப்பு ! ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டும் ஊதியம்

ஊரடங்கு எதிரொலி யால் ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50% மட்டும் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால் இதன் விளைவாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியது.வேலையின்றி வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ளனர்.மேலும் கொரோனா தடுப்பிற்கு மாநில அரசுகளும் நிதிகளை வழங்கி வருகிறது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் இந்த மாதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதன்விளைவாக அரசு ஊழியர்களுக்கு 50 % மட்டும் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வருவாய் இழப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கு 50 % மட்டும் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்திலும் 50 % பிடித்தம் செய்து வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.மேலும் மீதமுள்ள சம்பளம் நிதிநிலை சரியான பிறகு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.