#BREAKING : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் இந்தியாவில் மளிகை மற்றும் காய்கறி கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.3 -வது ஊரடங்கு சமயத்தில் தான் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.இந்த சமயத்தில் தான் ஒரு சில மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.சுமார் 30 நாட்களுக்கு மேலாக மது அருந்தாமல் இருந்த மதுபிரியர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்தது என்று கூறலாம்.ஆந்திரா,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது வாங்குவதற்கு காலை முதலே மதுபிரியர்கள் கூட்டம் கூடடமாக வந்து மது வாங்கி சென்றனர்.இது பெரும் விவாதத்தை கிளப்பியது .அதாவது இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்குஇடையில் தான் தமிழக அரசு சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தவிர பிற இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வருகின்ற 17-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025