அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று…

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று எளிதில் உலக நாடுகளுக்கு பரவியது. இந்த பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். அந்த தண்டனை கைதிகளில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அந்த சிறை ஊழியர்கள் 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல், அந்த கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெர்மினல் என்னும் தீவில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்கும் பாதி கைதிகளுக்கு, அதாவது 644 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025