ஆன்லைனில் ரிலீஸ் செய்யும் கீர்த்தி சுரேஷ் படம்.!

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு முடிந்த பின்னரும் திரையரங்குகள் திறக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது . இதனால் பல பிரபலங்களின் படங்களை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.அதில் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த பட படங்களை OTT platform-ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதில் முதற்கட்டமாக நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகவுள்ள பொன் மகள் வந்தாள் படத்தை OTT platform – ல் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. இந்த படத்தை தற்போது ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025