சிலம்பரசனுக்கு வில்லனாக நடிக்கும் வைகை புயல் .!

மிஷ்கின் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் வடிவேலு வில்லனாக நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை . இருந்தாலும் ரசிகர்கள் இவரை விடுவதாக இல்லை, இவரின் நகைச்சுவை கலந்த நடிப்பினை பார்க்க பலரும் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் கூட இவர் வெப் சீரிஸ் ஒன்றில் இவர் நடிக்க போவதாக தகவல் வெளியானது, ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்று வடிவேலு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வடிவேலு அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் திரைப்படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையெனில் வைகை புயலை நெகட்டிவ் கேரக்டரில் பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025