அன்று தான் தல எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்று தெரிந்தது.! பிரபல நடிகை ஓபன் டாக்.!

தல அஜித் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்று அன்று புரிந்து கொண்டேன் என்று முன்னணி நடிகை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தல அஜித் அவர்கள் நடிப்பில் ராமசுந்தரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஏகன். இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தவர் பியா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல குறித்து கூறியுள்ளார். அதில் ஏகன் படத்திற்காக ஏர்காடில் நடைப்பெற்ற படப்பிடிப்பில் அஜித் அவர்கள் காரில் வந்ததாகவும், பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க ஓடி வந்ததாகவும் , அன்று தான் அவர் எனக்கு அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என்றும், எவ்வளவு பெரிய ஸ்டாருடன் நாம் பணிபுரிகிறோம் என்று புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025