நீங்க போலீஸா..? இல்ல மிலிட்டரி “சக்ரா” படத்தின் டிரைலர்.!

விஷால் நடிப்பில் உருவாகிய சக்ரா படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
மேலும் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தனர்.அண்மையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர் புரோமோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
Presenting the Trailer of #Chakra in 4 Languages
Tamil https://t.co/tH1za46G1u
Telugu https://t.co/R7WaVzdgdv
Malayalam https://t.co/RtHWJeUZTq
Kannada https://t.co/FsouyOfo6C #ChakraTrailer#WelcomeToDigitalIndia
— Vishal (@VishalKOfficial) June 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025