சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 3 1/2 பவுன் நகை திருட்டு.!

சிதம்பரத்தில் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட 3 அரை பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் இவருடைய மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும்அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர் நண்பர் ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் வீடு திறந்து கிடந்தது மேலும் இதனை பார்த்த ஸ்டாலின் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக ஸ்டாலின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 3 அரை பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டை குறித்து யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025