ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

ஜூலை 21 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அமர்நாத் யாத்திரை தாமதமாகி உள்ளதோடு, அதற்கான கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 21-ம் தேதி முதல் 2020-ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை தொடங்குகிறது. இந்த யாத்திரையானது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாதுக்களை தவிர, 55 வயதுக்கு குறைவான யாத்ரீகளும் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைவருக்கும் எல்லையிலேயே சோதனை நடத்தப்படும் என்றும், வைரஸ் தொற்று இல்லை என்று சான்று இருந்தால் மட்டுமே, குகை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025