புல்வாமா என்கவுண்டர்.! ஒரு வீரர் உயிரிழப்பு.! 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்.!

Default Image

ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் கூசு என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் ஆகியோர் அடங்கிய குழு  குறிப்பிட்ட இடத்திற்குவிரைந்து சென்றனர்.

அதிகாலை 5.30 மணியளவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த   இடத்தை சுற்றி மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் மற்றும் மத்திய ரிசர்வ் படை இடையில் தாக்குதல் நடைபெற்றது.

 இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.மேலும், இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam