பப்ஜி கேம் விளையாடுவதற்காக 2 லட்ச ரூபாய் செலவளித்த சிறுவன்.. அதிர்ச்சியில் பெற்றோர்!

பப்ஜி கேம் விளையாடுவதற்காக பஞ்சாபை சேர்ந்த சிறுவன், தனது தாத்தாவின் வங்கிக்கணக்கில் இருந்து 2 லட்ச ருபாய் வரை செலவு செய்தான்.
உலகளவில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. பல விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளை சந்தித்தாலும், தற்பொழுது வரை இந்த விளையாட்டை பலரும் விளையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேமில் உள்ள துப்பாக்கி ஸ்கின், உடைகள், உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தனது தாத்தாவின் இருந்து ரூ.2 லட்சம் செலவழித்து தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் பப்ஜி விளையாட தொடங்கிய அந்த சிறுவன், அந்த விளையாட்டுக்கு அடிமையானான்.
மேலும், அந்த விளையாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணத்தை செலவழிக்க ஆரமித்தான். அதற்க்கு தனது தாத்தா பெயரிலே பேடியம் கணக்கை உருவாக்கி , அது மூலமாக பணம் செலுத்தி வந்தார். அவரின் வங்கிக்கணக்கை சோதனை செய்த அந்த சிறுவனின் பெற்றோர்கள், பணம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பணம் எடுக்கப்பட்டதை அந்த சிறுவனிடம் கேட்டபோது, அவன் ஒப்புக்கொண்டான். அதில் ரூ.2 லட்சம் வரை செலவுசெய்ததாகவும் கூறினான். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.55ஆயிரம் வரை செலவு செய்ததாகவும் அந்த சிறுவன் கூறினான். இதற்க்கு முன் பஞ்சாபை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவன், பப்ஜி விளையாடுவதற்காக 16 லட்ச ருபாய் செலவு செய்தது, குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025