பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது! உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை!

வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர்கள் திறன் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைகாட்சி மூலம் நாட்டு மாக்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
அவர் கூறியதாவது, திறன் மட்டுமே நம்முடைய வலிமை. ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும். கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025