நாளையுடன் நிறைவடைய உள்ள ஊரடங்கு ! மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.எனவே கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து ஆலோசனை முதல்வர் பழனிசாமி மேற்கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025