இந்தியாவில் ஸ்மார்ட்போன் இறக்குமதி அதிகரிப்பு..13 கோடி ஸ்மார்ட்போன் விற்பனையாகும் என கணிப்பு.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உலக மக்களை அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அதிக பங்குகளை வகித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளில் வழக்கத்தைவிட பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி இந்த வருடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு காரணமாக பல்வேறு தொழிற்சாலைகள் பல கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இதனால், விற்பனையாளர்கள் வெளிநாடுகளிலிருந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி அதிகமாக உள்ளது. மேலும், தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 5.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் இந்த வருடம் 13 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காக தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மொபைல் போன்களின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025