நாகப்பட்டினத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தனியார் தொழிற்சாலைக்கு ஐசிஓஎல் எனும் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தின் குலையன்கரிசல், பொட்டல்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்ததற்கு முதலில் பேசியபடி விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குழாய் பதிக்கும் பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவரம் அறிந்து அங்கு வந்த போலீசார் நீதிமன்ற உத்தரவு வந்த பிறகே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறும் என உறுதியளித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.