கொரோனாவில் இருந்து SPB மீண்டாரா.? – மகன் சரண் விளக்கம்.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி.யின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக என வெளியான தகவல் வதந்தி என்று மகன் சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என்றும் எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.சரண், தந்தையின் உடல்நிலை குறித்து எனக்கே முதலில் தகவல் கிடைக்கும். பிறகு தான் ஊடகங்களுக்கு தரப்படும். அவருக்கு COVID-19 Positive/Negative என்பதை எல்லாம் தாண்டி, இன்னமும் தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மகன் சரண் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025