எனது இனிய அன்பு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – முக ஸ்டாலின் ட்வீட்

எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் – முக ஸ்டாலின்.
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும் 68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான ‘கேப்டன்’ @iVijayakant அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
68ல் அடியெடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) August 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025