மார்ச் 2020 முதல் இதுவரை மட்டும் 20,556 பேருக்கு டயாலிசிஸ் – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

மார்ச் 2020 முதல் இதுவரை 20,556 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
கொரோனா வைரஸ் காலத்திலும் தமிழக அரசு கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20,556 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,154 கர்ப்பிணி பெண்களும், 37,436 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற்று பயனைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார். 805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88,280 அலகு ரத்தம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வுபெறமால் நடைபெற்றதன் காரணத்தால், கொரோனா தொற்று காலத்தில் விலைமதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்திலும் தமிழக அரசு கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்#COVID19chennai | #coronavirus | #vijayabaskar pic.twitter.com/TiMfnHoPIf
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025