#BreakingNews : சென்னையில் இன்று ஒரே நாளில் 1285 பேருக்கு கொரோனா

சென்னையில், இன்று ஒரே நாளில் 1285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டுமே 1,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,16,808 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,653 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,712 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025